Posts

ஒரு தலை காதல் ( One side love)

Image
  Hello!!! There is Sivabalan One heart → One love →One life நாணயத்தின் இரண்டு பக்கங்களாய் அவளும் நானும், நான் தலை, அவள் பூ. ஆம், அந்த பூவின் மீது இந்த தலை கொண்ட காதலே ஒரு தலை காதல். சேரவும் முடியாமல், பிரியவும் முடியாமல் தினம்தினம் தவிக்கிறேன் நான் (தலை). அவளோ அந்த பக்கம், என்னை கண்டு கொள்ளாமல் புன்னைகத்துக் கொண்டுடிருக்கிறள், தினம்தினம்(பூ). அவள் என்னை துளியளவு காதலிக்கவில்லை என்றலும், நான் அவளை கடலளவு காதலித்து கொண்டே இருப்பேன் எந்நாளும். அதுவே ஒரு தலை காதலின் தனிச்சிறப்பு.  அவள் என்னைத்தவிர யாரையும் காதலிக்ககூடாது என்று தினம்தினம் இறைவனிடம் வேண்டி வருகிறேன் ஏணனில், நான் என் காதலை அவளிடம் சொல்கையில், அவள் அதை காரணமாக முன் வைத்து விடக்கூடாது என்பதற்காக.  சிலநாள் அவளை நேரில் காணமுடியாமல் பகலில் தவித்தேன். இரவில் அதிசியமாய்  வந்தால் என் கணவில் அவள். இது தான் ஒரு தலை காதலோ?... பூவின் மீது தலை கொண்ட காதல், என் தலை மண்ணின் மீது இருக்கும் வரை சாகாது... LABELS: One Side love Love , Affection , Crush . LOCATION: India Share.  

நிலா(MOON)

Image
  Hello!! There is Sivabalan Moon ↔ Water ↔ Grandmother என் காதலிதான் இவ்வுலகிலேயே மிக அழகானவள் என்று நினைத்திருந்தேன்... உன்னை கண்டதும் எந்தன் சிந்தனை சுக்குநூறாக உடைந்தன.. இத்தனை தூரத்தில் இருந்தாலும் அத்தனை அழகாக தெரிவதன் ரகசியம் தான் என்னவோ.. மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு உன்னை ரசிக்கையில், தூக்கம் கூட வர மறுக்கின்றது.  விடியும் போது என்னிடம் சொல்லாமல் சென்றது ஏன்? LABELS:  Moon, Love , Distance. Share.

பெண்ணின் கோபம்(Go Bomb)

Image
  Hello!!! There is Sivabalan ANGRY 😡 எனது அன்பிற்குரிவள்... என்னை காரணமின்றி வெறுப்பதுவோ ஏன்? காரணம் சொன்னால் நான் நொந்துபோவேன் என்றா? அப்படி என்ன செய்தேன் நான்... எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை.. என் அன்பிற்குரியவளின் தண்டனையிலிருந்து எப்போது கிடைக்கும் எனக்கு விடுதலை சிறையின்றி கைதியாய் உள்ளேன் அவளின் தண்டனையால்.. வருடத்தின் அதிசய நாளான அவளது பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து தெரிவிக்க முடியமல், வாழ்த்து தெரிவித்தால் என் அன்பிற்குரியவள் அதனை எவ்வாறு எடுத்துக் கொள்வாளோ என்று புரியாமல் தினந்தோறும் பிதற்றுகிறேன் பைத்தியமாக. அவளின் கோபத்(வெறுப்பு) திற்குதான் காரணம் என்னவோ? கடவுளே ! நீயாவது நேரில் வந்து சொல்...   LABELS: Angry, Feeling, Sad.

உண்மையான காதல் (True love)

Image
Hello!!! There is Sivabalan Heart + Heart = Love             ↕       You + Me ஆம், கடலின் ஆழத்தினை விட உண்மையான காதலின் ஆழம் பெரியது. ஆம், பெளர்ணமி அன்றுதோன்றும் முழுநிலவினை விட  உண்மையான காதல் அழகானது. ஆம், நீல வானத்தை விட உண்மையான காதல் பரந்து விரிந்தது. ஆம், தாய் அன்புக்கு நிகரானது உண்மையான காதல். ஆம், ஆணையும் பெண்ணையும் இணைக்கும் கண்ணால் பார்க்க முடியாத ஓர்அற்புத சக்தியே உண்மையான காதல். ஆம், அற்ப ரூபாய் நோட்டுக்களை காணாது ஈடு இணை இல்லாத உள்ளத்தை பார்த்து உண்டாகுவதே உண்மையான காதல். உலகம் அழியும் வரை உண்மையான காதல் அழிவதில்லை...காதல்...நிரந்தரமான ஓர் போதை. LABELS: True love, Heart, Relationship. LOCATION: India Share.

காற்று ( cannot live without oxygen )

Image
 Hello!!! There is Sivabalan TREES > OXYGEN > COVID                         ↕               CORPORTE நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பர். அதுபோல உனது (ஆக்ஸிஜன்) அருமையை கொரோனாவினால் உணர்கிறோம் நாங்கள். மனிதர்களாகிய நாங்கள் உயிர்வாழ (ஆக்ஸிஜன்) மரங்கள் அவசியம் என்பதனை மனதார ஒப்பு கொள்கிறோம். உனது (ஆக்ஸிஜன் காற்று) பிரிவினால் உயிர்கள் பிரிகின்றன. உயிர்களின் பிரிவுகளினால் மனித உள்ளங்கள் உடைகின்றன. நீ உருவாகும் இடத்தினை (மரம்) எங்களின் முன்னேற்றத்திற்காக அழித்தோம் அதன்மூலமாக எங்களின் அழிவை நாங்களே தேடிக்கொண்டோம். பஞ்சபூதங்களின் நீயும் ஒருவன் என்பதனை உணர்த்திவிட்டாய்.இயற்கையாக (மழைச்சாரல் காற்று) வரவேண்டிய உன்னை செயற்கையாக (AC) வரவைத்தோம். இப்போது இயற்கையாக வரவேண்டிய மரணத்தை செயற்கையாக எங்களின் செயல்களினால் வரவைத்துவிவிட்டு, இழந்த ஒவ்வொரு உயிருக்காகவும் (மரம்) வருந்துகிறோம். SAVE TREES...❣️ LABELS : Oxygen, cannot live without oxygen, Covid, Trees. LOCATION : INDIA